தேர்தல் ஆணையம்
ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்தியா சர்வதேச நிறுவனத்தில் டி. என். சேஷன் இருக்கைக்கான முதலாவது கவுரவ பேராசிரியராக டாக்டர் அஷூதோஷ் குமார் நியமனம்
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAR 2022 1:38PM by PIB Chennai
இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி. என். சேஷனின் சாதனைகள் & பங்களிப்பையும், இளைய மற்றும் எழுச்சியுறும் இந்தியாவுடனான அவரது சிறப்பு பிணைப்புகளை நினைவுகூர்ந்து கொண்டாடும் விதமாகவும், புதுதில்லியில் உள்ள ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச நிறுவனத்தில் பாடத்திட்ட மேம்பாட்டு மையத்தில் தேர்தல் படிப்புகளுக்கான பல்வேறு அணுகுமுறைகள் குறித்து ஆராயும் விதமாகவும் இந்திய தேர்தல் ஆணையம் இந்த இருக்கையை ஏற்படுத்தி அதற்குரிய நிதியையும் வழங்கி வருகிறது.
இந்த இருக்கைக்கான பொறுப்பாளராக இருந்து வரும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு என் கோபாலசாமி தலைமையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே உள்ளிட்டோரை உறுப்பினர்களாக கொண்ட குழு, பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் அஷூதோஷ் குமாரை டி எஸ் சேஷன் இருக்கைக்கான கவுரவ பேராசிரியராக நியமித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811854
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1812062)
வருகையாளர் எண்ணிக்கை : 193