பாதுகாப்பு அமைச்சகம்
சேட்டக் ஹெலிகாப்டரின் வைர விழாவை இந்திய விமானப்படை ஏப்ரல் 2 அன்று கொண்டாடுகிறது
Posted On:
30 MAR 2022 3:52PM by PIB Chennai
இந்திய ராணுவத்தால் உருவாக்கப்பட்ட சேட்டக் ஹெலிகாப்டர் தேசத்திற்கான புகழ்மிக்க சேவையின் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வைக் கொண்டாட ‘வெற்றிகரமான அறுபதுகள்’ என்ற தலைப்புடன் ‘சேட்டக் – சுயசார்பு, பல்துறை மற்றும் நம்பிக்கையின் புகழ் பெற்ற ஆறு தசாப்தங்கள்’ என்ற மையப்பொருளில் 2022 ஏப்ரல் 2 அன்று விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் பயிற்சிப் பிரிவின் மூலம் ஹக்கிம் பேட் விமானப்படை தளம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ் நாத் சிங் தலைமை விருந்தினராக பங்கேற்பார். செகந்திராபாத்தில் உள்ள தேசிய தொழில் பாதுகாப்பு கல்விக்கழக மாநாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் விமானப்படை தளபதி மற்றும் முப்படைகளைச் சேர்ந்த பணியில் உள்ள, ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள், பாதுகாப்புத் துறை, இந்திய கடலோர காவல் படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
நாட்டில் அறுபது ஆண்டுகளாக ஹெலிகாப்டர் இயக்குவதில் குறிப்பாக சேட்டக் ஹெலிகாப்டர் இயக்கப்படுவதில் உள்ள சிறப்பம்சங்களை இந்த விழா வெளிப்படுத்தும்.
***
(Release ID: 1811544)