சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாட்டில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள்
Posted On:
30 MAR 2022 2:49PM by PIB Chennai
நாட்டில் தற்போது மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்த விவர அறிக்கை ஏதும் இல்லை என மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது 06.12.2013 முதல் தடை செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். எந்த ஒரு தனி நபரோ அல்லது அமைப்போ மேற்குறிப்பிட்ட தேதியிலிருந்து மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் எந்தவொரு நபரையும் ஈடுபடுத்துவதோ அல்லது இதற்காக பணியமர்த்துவதோ இல்லை. அது போன்று பணி அமர்த்துவது 2013ஆம் ஆண்டு தடைச்சட்டத்திற்கு எதிரானது என்றும் இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 398 துப்புரவு தொழிலாளர்கள் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ள திரு ராம்தாஸ் அத்வாலே, அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 32,473 தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதே போன்று தமிழ்நாட்டில் 2017முதல் 2021-ஆம் ஆண்டு வரை 43 தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்திருப்பதாகவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811403
------
(Release ID: 1811540)