ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தீன் தயாள் உபாத்யாயா கிராம கவுசல்யா திட்டத்தின் மறுஆய்வு: 7 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAR 2022 4:24PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

தீன் தயாள் உதாத்யாயா கிராம கவுசல்யா திட்டம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் அவ்வப்போது மறுபரிசீலனை செய்து அமல்படுத்தப்படுகிறது. மேலும், நிதி ஆயோக்கும், இத்திட்டத்தை மதிப்பீடு செய்துள்ளது.

2021-22ம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ்  2.80 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்து 1.96 லட்சம் பேரை பணியமர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-15ம் ஆண்டிலிருந்து இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது, நாடு முழுவதும், பல பயிற்சி மையங்களில் 1/28 லட்சம் பேர் பயிற்சி பெற்றுவருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810966

                                ****************************


(வெளியீட்டு அடையாள எண்: 1811136) வருகையாளர் எண்ணிக்கை : 140
இந்த வெளியீட்டை படிக்க: English