விவசாயத்துறை அமைச்சகம்
உயர் மதிப்பு பயிர் வகைகளை பயிரிடுதல்
Posted On:
29 MAR 2022 2:49PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வேளாண் மற்றும் விவசாயங்கள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
அதிக மதிப்புள்ள பயிர்கள் எனப்படுபவை முக்கியமாக தோட்டக்கலைப் பயிர்களான பழங்கள், பூக்கள், மசாலாப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் நறுமணத் தாவரங்கள் போன்றவை ஆகும்.
இந்த தோட்டக்கலைப் பயிர்களில் பெரும்பாலானவற்றின் உற்பத்தி மற்றும் நிகர வருமானத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. பழங்கள், காய்கறிகள், வேர் மற்றும் கிழங்கு பயிர்கள், காளான்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள், நறுமணச் செடிகள், தென்னை, ஆகியவற்றை உள்ளடக்கிய தோட்டக்கலைத் துறையின் முழுமையான வளர்ச்சிக்காக 2014-ம் ஆண்டு மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தோட்டக்கலைத் துறையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான இயக்கம் தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலம்/பிராந்தியத்தின் ஒப்பீட்டு நன்மைகள் மற்றும் அவற்றின் மாறுபட்ட வேளாண் பருவநிலை அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, விரிவாக்கம், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, செயலாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பிராந்திய அடிப்படையிலான வேறுபட்ட உத்திகள் மூலம் தோட்டக்கலை உற்பத்தியை மேம்படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குதல் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிவை இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
பொது, தனியார் மற்றும் கூட்டுறவுத் துறைகளில் இருந்து முதலீடுகளை ஊக்குவிக்கவும், தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சியில் புதுமையான தொழில்நுட்பங்களைச் சேர்க்கவும் பல்வேறு கூறுகளின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தோட்டக்கலைத் துறையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான இயக்கத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டு ரூ 1620 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 2329.13 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 2546.30 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 2209.57 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 2160.26 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810905
***********************
(Release ID: 1811100)
Visitor Counter : 151