விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவி

Posted On: 29 MAR 2022 2:52PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதுமை கண்டுபிடிப்பு மற்றும்  வேளாண் தொழில்முனைவு மேம்பாடு என்ற திட்டத்தை வேளாண் துறை அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் வேளாண் தொடக்க நிறுவனங்கள் உட்பட 799 தொடக்க நிறுவனங்களுக்கு  நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அளிக்கப்படுகின்றன.

அதோடு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வேளாண் புதுமை கண்டுபிடிப்பு நிதி திட்டத்தின் கீழ் வேளாண் தொடக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உதவி வருகிறது.  இந்த நிதி கடந்த 2016-17ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் புத்தாக்க நிதி, பாதுகாப்பு நிதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு பிரிவு என்ற இரு அம்சங்கள்  உள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் வேளாண் தொழில் பாதுகாப்பு அமைப்புகள் வேளாண் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் உட்பட இதர தொடக்க நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோருக்கும் இதர பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகின்றன. 

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தனது 50 மையங்களில் வேளாண் தொழில் பாதுகாப்பு அமைப்பு மூலம்   818 தொடக்க நிறுவனங்களுக்கு உதவி அளித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810911

                                                                                ***********************


(Release ID: 1811090)
Read this release in: English , Urdu