ஆயுஷ்
மருத்துவ தாவரங்கள் விவசாயத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதலுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
Posted On:
29 MAR 2022 2:55PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஆயுஷ் அமைச்சர் திரு. சரபானந்த சோனோவால் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
இந்தியாவில் தற்போது 8000 மருத்துவ தாவர இனங்கள் உள்ளன என்று இந்திய தாவரவியல் ஆய்வகம் (பிஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. நாட்டின் தாவர பன்முகத்தன்மையை ஆய்வு செய்யும் பணி பிஎஸ்ஐ-க்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ / நறுமண தாவரங்கள் மற்றும் மூலிகைகள் உட்பட நாட்டின் அனைத்து தாவர வளங்களையும் ஆய்வு செய்து அது ஆவணப்படுத்துகிறது. இந்த கணக்கெடுப்பு குறிப்புத் தாவர சேகரிப்புகளுக்கான முக்கிய களஞ்சியமாகும்.
பல்வேறு வகைகளை சேர்ந்த சுமார் 3.2 மில்லியன் மாதிரிகள் தற்போது சேகரிப்பில் உள்ளன. மருத்துவ தாவரங்கள் உட்பட இனங்களின் வகைபிரித்தல் மற்றும் கண்காணிப்புக்கு இது உதவுகிறது.
மேற்கு இமாலயப் பகுதிகளில் 1500 வகை மருத்துவ தாவர வகைகளும், கிழக்கு இமாலயப் பகுதிகளில் 3000 வகை மருத்துவ தாவர வகைகளும், மேற்கு தொடர்ச்சி மலையில் 2000 வகை மருத்துவ தாவர வகைகளும், அந்தமான் மற்றும் நிகோபார் உள்ளிட்ட கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1500 வகை மருத்துவ தாவர வகைகளும் உள்ளன.
பல்வேறு ஆதாரங்களில் உள்ள தரவுகளின்படி, இந்திய மருத்துவத்தின் வெவ்வேறு பாரம்பரிய முறைகளில் 2800-க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. "மருத்துவ தாவரங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நிலையான மேலாண்மை" என்ற மத்திய துறை திட்டத்தை தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் செயல்படுத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810916
(Release ID: 1811050)