பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு, நாடு முழுவதும் 25,218 எல்பிஜி விநியோகஸ்தர்கள் உள்ளனர்
Posted On:
28 MAR 2022 4:25PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயுத்துறை இணையமைச்சர் திரு. ராமேஷ்வர் தெலி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
எல்பிஜி விநியோகஸ்தர்கள் நியமனம் தொடர்ச்சியான நடைமுறை. விற்பனை திறன் அடிப்படையில் எல்பிஜி விநியோக இடங்கள் அடையாளம் காணப்படுகின்றன.
கடந்த 1ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 25, 218 எல்பிஜி விநியோக நிறுவனங்கள் உள்ளன. எல்பிஜி விநியோகஸ்தர்கள் தேர்வு வழிகாட்டுதல்கள் படி, நாடு முழுவதும் 6,411 இடங்களில் எல்பிஜி விநியோக விளம்பரங்களை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வெளியிட்டன. இவற்றில் 5,293 இடங்களில் , எல்பிஜி விநியோகம் தொடங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810517
*************
(Release ID: 1810678)
Visitor Counter : 168