எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2030ம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன்களும், 2047ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டன்களும் என்ற எஃகு உற்பத்தி இலக்கை அடைய யுக்திகள் வகுக்க வேண்டும்: எஃகுத்துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங்

Posted On: 27 MAR 2022 4:36PM by PIB Chennai

எஃகு துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக்குதல் - 2ம் நிலை எஃகு துறையின் பங்கு’’  என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கு புதுதில்லி, விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது.

இந்தக்  கருத்தரங்கைத்  தொடங்கி வைத்த மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் கூறியதாவது:

எஃக்குத் தொழிற்சாலைகளின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும். தடையற்ற, வெளிப்படையான மற்றும் அனுசரித்துச்  செல்லும் நடைமுறைதான் மத்திய அரசின் இலக்கு. கடந்த 1991ம் ஆண்டில் 22 மில்லியன் டன்களாக இருந்த எஃகு உற்பத்தியை, 2021-22ம் ஆண்டில் 120 மில்லியன் டன்களாக  எஃகு ஆலைகள் உயர்த்தியுள்ளன. 

இதை 2030ம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன்களாகவும், 2047ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டன்களாகவும் உயர்த்த யுக்திகள் வகுக்க வேண்டும். இதற்கு இரும்புத்தாது மற்றும் இதர மூலப் பொருட்கள் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.  ஹைட்ரஜனைப்  பயன்படுத்தி சுத்தமான முறையில் எஃகு தயாரிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கையும் உடனடியாக அடைய வேண்டும்.  நிலக்கரிக்கு மாற்றாக ஹைட்ரஜன் பயன்படுத்தும்போது, இரும்பு மற்றும் எஃகு தொழிலற்சாலைகள் மிகுந்த பயனடையும். நிலக்கரியை இறக்குமதி செய்வதும் குறையும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் கூறினார்.

எஃகுத்துறை இணையமைச்சர் திரு ஃபகன் சிங் குலாஸ்தே கூறுகையில், ‘‘ எஃகு தொழில்துறையினர் தங்கள் தேவைகளை மத்திய அரசுக்கு நம்பிக்கையுடன் தெரிவித்து உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் பல உதவிகளை, இத்துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் கொன்டு தெரிவித்தார்.

இந்தக்  கருத்தரங்கில், இத்துறையைச் சேர்ந்த பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்திக்  குறிப்பைக்  காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1810237

*************


(Release ID: 1810280) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Hindi