அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வானியல் கூட்டத்தில் அத்துறையின் புதிய போக்குகள் குறித்து விவாதம்
Posted On:
27 MAR 2022 12:35PM by PIB Chennai
இந்திய வானியல் சங்கத்தின் 40-வது ஆண்டுக் கூட்டத்தில், வானியலின் முக்கிய பகுதிகளில் உருவெடுத்து வரும் புதிய போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. விண்மீன் வானியல், சூரியக் குடும்பம், பொதுச் சார்பியல் மற்றும் அண்டவியல், வானசாஸ்திரம் மற்றும் தரவு அறிவியல் உள்ளிட்ட ஆராய்ச்சி விவரங்கள் இந்த விவாதத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்திய வானியல் சங்கத்துடன் இணைந்து, ஐஐடி ரூர்க்கி, ஆர்யபட்டா அறிவியல் ஆய்வு நிறுவனம் (ஏரிஸ்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவை இந்தக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. ஐஐடி ரூர்க்கியில் 2022 மார்ச் 25 முதல் 29 வரை இது நடைபெறுகிறது.
இந்தியா முழுவதிலும் இருந்து 300 வானியல் வல்லுநர்கள் உள்பட உலகம் முழுவதிலுருந்து 400- க்கும் மேற்பட்ட வானியல் நிபுணர்கள் காணொலி மூலம் இதில் கலந்து கொள்கின்றனர்.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜயராகவன் தமது தொடக்கவுரையில், தரவுகளால் நிறைந்த இந்தக் காலத்தில் வானசாஸ்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810176
***************
(Release ID: 1810210)
Visitor Counter : 266