சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சென்னை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAR 2022 4:37PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
16.03.2022 நிலவரப்படி, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1104 ஆக இருக்கும் நிலையில், 699 நீதிபதிகள் பதவியில் உள்ளனர், 405 நீதிபதிகளின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
உயர் நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பது நிர்வாகம் மற்றும் நீதித்துறைக்கு இடையேயான தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த மற்றும் கூட்டுச் செயலாகும். இதற்கு மாநில மற்றும் மத்திய அளவில் ஆலோசனை மற்றும் ஒப்புதல் தேவை.
தற்போதுள்ள காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், நீதிபதிகளின் ஓய்வு, ராஜினாமா அல்லது பதவி உயர்வு மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் காலியிடங்கள் தொடர்ந்து எழுகின்றன.
சென்னை உயர்நீதி மன்றத்தை பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகவும், பணியிலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆகவும், காலியிடங்களின் எண்ணிக்கை 16 ஆகவும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809130
**********
(வெளியீட்டு அடையாள எண்: 1809341)
வருகையாளர் எண்ணிக்கை : 242