சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு

Posted On: 24 MAR 2022 4:10PM by PIB Chennai

புத்த மதம், கிறிஸ்தவம், ஜெயின், முஸ்லீம், பார்சி, சீக்கிய மதம் ஆகிய சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. 

  • மௌலானா ஆஸாத் தேசிய உதவித் திட்டத்தின் மூலம் நிதியுதவி
  • நயா சவேரா திட்டத்தின் மூலம் தொழில்நுட்பம், மருத்துவம், தொழில் படிப்புகளின் போட்டி நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பயிற்சி.
  • பதோ பர்தேஷ் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விக் கடனுக்கான வட்டிக்கு மானியம் அளித்தல்.
  • நை உடான் திட்டத்தின் வாயிலாக மத்திய பணியாளர் தேர்வாணையம், அந்தந்த மாநில பணியாளர் தேர்வாணையம், அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நுழைவுத் தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.

உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அமல்படுத்தப்படுகிறது.  மக்களவையில் இதுகுறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809188

***************


(Release ID: 1809280) Visitor Counter : 337
Read this release in: English , Urdu