பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு

Posted On: 23 MAR 2022 3:49PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி இன்று அளித்த பதிலில் கூறியதாவது:

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, ஊட்டசத்து திட்டம் கடந்த 2018ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி தொடங்கப்பட்டது.  6 வயது வரை உள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பினி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலவரத்தை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் 2022 ஜனவரி 1ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி மற்றும் செலவிடப்பட்ட நிதி விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்துக்கு ரூ. 250 கோடியே  60 லட்சத்து 44 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.218 கோடியே 79 லட்சத்து 36 ஆயிரத்தை தமிழகம் பயன்படுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808684

                                ***********************



(Release ID: 1808921) Visitor Counter : 149


Read this release in: English , Gujarati