பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை
Posted On:
23 MAR 2022 4:30PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஆண்டு தோறும் தேர்வு செய்யப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கையை 180 ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதேபோல் ஆண்டு தோறும் தேர்வு செய்யப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 150-லிருந்து 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், காலிப் பணியிடங்களை, மாநில பணிகளில் உள்ள அதிகாரிகள் மூலம் நிரப்புவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
மாநில அளவில் ஐஏஎஸ் அதிகாரிகளின் காலிப்பணியிடங்கள் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 376. இதில் 322 பேர் பணியில் உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808722
***********************
(Release ID: 1808875)
Visitor Counter : 188