புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிகரித்துவரும் மாசு அளவுகள்

Posted On: 23 MAR 2022 1:54PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த புவி அறிவியல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர். ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

குறிப்பாக தில்லியில் நிலவும் மாசு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசு முகமைகள் மற்றும் சூழலியலில் உள்ள மற்றவர்களுக்கு மாசு அளவுகள் குறித்த புள்ளியியல் விவரங்களை புவி அறிவியல் அமைச்சகம் சரியான நேரத்தில் வழங்கி வருகிறது.

இது தொடர்பாக புவி அறிவியல் அமைச்சகத்தின் நிறுவனங்களான ஐஐடிஎம் மற்றும் இந்திய வானிலை துறை ஆகியவை தில்லி தேசிய தலைநகர் பகுதியில் முன்னேறிய காற்று தர மேலாண்மைக்காக காற்று தரம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு மற்றும் முடிவு ஆதரவு அமைப்பு ஆகியவற்றை உருவாக்கியுள்ளன.

இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள் சரியான நேரத்தில் காற்று தரத்தை நிர்வகிப்பதற்கு உதவும். இந்திய அரசால் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள படிப்படியான எதிர்வினை செயல் திட்டத்திற்கு இவை பங்காற்றும்.

மேலும், பொதுமக்கள் மற்றும் முடிவெடுப்போர்க்கு காற்றின் தரம் குறித்த உடனடி உள்ளீடுகளை வாங்குவதற்கு இணையதளமும் செயல்படுகிறது. காற்று தரம் குறித்த ஆய்வுகள் ஆராய்ச்சிகள் மற்றும் எச்சரிக்கைகளை புதிய அறிவியல் அமைச்சகம் தற்சமயம் வழங்கி வருகிறது.

 மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808616

*****


(Release ID: 1808778) Visitor Counter : 174


Read this release in: English , Bengali