ஆயுஷ்

ஆயுர்வேத மருந்துகளின் மறுமலர்ச்சி

Posted On: 22 MAR 2022 3:14PM by PIB Chennai

ஆயுர்வேத மருத்துவம் என்பது இந்தியாவின் பழமையான பாரம்பரிய மருத்துவ முறையாகும். ஆயுஷ் அமைச்சகம் மூலம்   இத்துறையில் மருத்துவக் கல்வி, நடைமுறை, உற்பத்தி, ஆராய்ச்சி, மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு போன்றவை வளர்ச்சி அடைந்தது. கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஆயுர்வேத மருந்துகளின் மகத்துவமும், உபயோகமும் மேலும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், 1.54 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவிலிருந்து ஆயுஷ் மற்றும் மூலிகை மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.  கடந்த 2020-21ஆம் ஆண்டில் உள்நாட்டில் 164 கோடியே இரண்டு லட்சம் ரூபாய் அளவுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் யுனானி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ மருந்து உற்பத்தித் துறை கழக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808150

----



(Release ID: 1808289) Visitor Counter : 163


Read this release in: English , Urdu , Bengali