மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
விளையாட்டுகளில் குழந்தைகளின் மேம்பாடு
Posted On:
21 MAR 2022 3:43PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கல்வித் துறை இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கீழ்காணும் விவரங்களை வழங்கினார்.
தேசிய பாடத்திட்டச் செயல்முறையின்படி சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சிக் கல்வி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடம் ஆகும். இவை குறித்த ஆசிரியர் கையேடு மற்றும் பாடப்புத்தகங்களை,
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு கொண்டு வந்துள்ளது.
கூடுதலாக, முறைப்படுத்தப்பட்ட மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சிக் கல்வி திட்டத்தை மத்திய பள்ளிக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை
சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சிக் கல்விப் பாடங்களை சிபிஎஸ்இ கட்டாயமாக்கி உள்ளது.
1 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வகுப்பை சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கண்ட வகுப்புகளில் உள்ள மாணவர்கள் அவர்களது விருப்பம் மற்றும் திறமைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் இரண்டு விளையாட்டுகளில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும்.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதுவதற்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், உடலுறுதி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களைப் பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கி உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் உறுதி மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கொள்கைகள் மற்றும் செயல்முறைகளைப் பின்பற்ற கல்வி நிலையங்களை இந்த வழிகாட்டுதல்கள் ஊக்குவிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807641
*******************
(Release ID: 1807883)
Visitor Counter : 142