மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கல்வியில் சர்வதேச தரங்களை எட்டுவதற்கான சீர்திருத்தங்கள்

Posted On: 21 MAR 2022 3:44PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கல்வித் துறை  இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் கீழ்காணும் விவரங்களை வழங்கினார்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு 2020 ஜூலை 29 அன்று தேசிய கல்விக்  கொள்கை 2020-ஐ கல்வி அமைச்சகம் அறிவித்தது. ஐஐடிக்கள், ஐஐஎம்கள் ஆகியவற்றுக்கு  இணையாக, முழுமையான மற்றும் பல்முனை கல்வியை வழங்குவதற்காக, பல்முனை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு தேசிய கல்வி கொள்கை 2020 பரிந்துரைக்கிறது.

அனைத்து கல்வித்  திட்டங்கள், படிப்புகள், பாடங்கள் உள்ளிட்டவை உலகத் தரத்தை உறுதி செய்வதை நோக்கமாக கொள்ள வேண்டும் என்று தேசிய கல்விக்  கொள்கை மேலும் கூறுகிறது. ஒழுங்குமுறை, அங்கீகாரங்கள், நிதி வழங்கல், மற்றும் கல்வித்தர நிர்ணயம் ஆகிய நான்கு சுதந்திரமான பிரிவுகளைக் கொண்ட இந்திய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்க தேசிய கல்விக்  கொள்கை 2020 பரிந்துரைக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, இந்திய உயர்கல்வி ஆணைய மசோதாவை உருவாக்குவதில் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. உயர்கல்வியில் மாணாக்கர் சேர்க்கை விகிதங்களை, 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்கவேண்டும் என்ற தேசிய கல்விக்  கொள்கையின் பரிந்துரையைக்  கருத்தில்கொண்டு நிபுணர் குழு ஒன்றைப்  பல்கலைக்கழக மானிய குழு அமைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807642

                           **********************

 

 

 


(Release ID: 1807874) Visitor Counter : 375
Read this release in: English , Urdu