சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையம்

प्रविष्टि तिथि: 21 MAR 2022 2:47PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரன் ரிஜிஜு கீழ்காணும் விவரங்களை வழங்கினார்.

நீதித்துறை உள்கட்டமைப்பு மற்றும் நீதிமன்ற வசதிகளின் நிலை குறித்தத் தரவுகளை உச்ச நீதிமன்றப் பதிவகம் தொகுத்துள்ளது. நீதிமன்றங்களுக்குப் போதுமான உள்கட்டமைப்புகளை ஏற்பாடு செய்வதற்காக இந்திய தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை அமைப்பதற்கான முன்மொழிவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து பெறப்பட்டது.

இந்தியத் தலைமை நீதிபதியின் தலைமையில் ஆட்சி மன்றக் குழு செயல்படும்அனைத்து உயர் நீதிமன்றங்களின் கீழும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்புகள்இந்திய நீதிமன்ற அமைப்புக்கான செயல்பாட்டு உள்கட்டமைப்பின் திட்டமிடல்உருவாக்கம்மேம்பாடுபராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கான செயல்திட்டத்தை உருவாக்குவதற்கான மைய அமைப்பாக ஆணையம் செயல்படும் என்பது முன்மொழிவின் மற்ற முக்கிய அம்சங்களாகும்.

 

இதில் பல்வேறு மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் முக்கியமான பங்குதாரராக இருப்பதால்அவர்களின் கருத்துக்களுக்காக முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

நீதித்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தைப் பொறுத்த வரையில்நீதித்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது.

மாநில அரசுகளின் வளங்களைப் பெருக்கும் நோக்கில்மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிதிப் பகிர்வு முறையில்  மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் 1993-94 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ரூ 8758.71 கோடியை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் 2014-15 முதல் ரூ 5314.40 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த வெளியீட்டில் இது 60.68% ஆகும்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807611


(रिलीज़ आईडी: 1807808) आगंतुक पटल : 302
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu