சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பை நிறுவுதல்: தமிழ்நாடு குறித்த தகவல்கள்
Posted On:
21 MAR 2022 2:50PM by PIB Chennai
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரன் ரிஜிஜு கீழ்காணும் விவரங்களை வழங்கினார்.
உயர் நீதிமன்றங்கள் வழங்கிய தகவல்களின் படி, 28.02.2022 அன்று நாட்டில் 20,814 நீதிமன்ற கூடங்கள் உள்ளன, 18,319 குடியிருப்புப் பிரிவுகள் நீதித்துறை அலுவலர்கள்/நீதிபதிகளுக்குக் கிடைக்கின்றன. 28.02.2022 அன்றைய நிலவரப்படி, நீதித்துறை அலுவலர்கள்/நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 24,520 ஆகும்.
5,170 நீதித்துறை அதிகாரிகள் பணியிடம் தற்போது காலியாக உள்ளது. மத்திய/மாநில அரசுகளிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட நீதிமன்றக் கூடங்கள் மற்றும் வாடகைக் கட்டிடங்களும் உள்ளடங்கிய உள்கட்டமைப்பில், அனைத்து நீதிமன்றக் கட்டிடங்களையும் நீதித்துறைக்குச் சொந்தமான கட்டிடங்களுக்கு மாற்றுவதும், அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கைக்கேற்ப நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும் அரசின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாவட்ட மற்றும் சார்பு நீதி மன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள்/ நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 1319 ஆகும், தற்போது பணியில் உள்ள நீதிபதிகள்/ நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 1080 ஆகும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1411371 ஆகும், நீதிபதிகள்/ நீதித்துறை அதிகாரிகளுக்கு நிலுவையிலுள்ள வழக்குகளின் விகிதம் 1 : 1306.83 ஆகும்.
தமிழ்நாட்டைp பொறுத்தவரை, மாவட்ட மற்றும் சார்பு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள்/ நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 1319 ஆகும், தற்போது பணியில் உள்ள நீதிபதிகள்/ நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 1080 ஆகும், காலியாக உள்ள நீதிபதிகள்/ நீதித்துறை அதிகாரி பணியிடங்களின் எண்ணிக்கை 239 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807614
*****
(Release ID: 1807771)
Visitor Counter : 237