பாதுகாப்பு அமைச்சகம்
தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடத் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
21 MAR 2022 2:41PM by PIB Chennai
உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு பாதுகாப்பு-தொழில்துறை வழித்தடங்கள் (DIC) தலா ரூ.10,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உத்தரப்பிரதேசப் பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்திற்காக (UPDIC), 8,764 கோடி ரூபாய் முதலீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டுள்ளன. உத்தரபிரதேசப் பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தில் தற்போதைய முதலீடு 1,552 கோடி ரூபாய். மேலும், தமிழ்நாடு அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை வழிதடத்தில் (TNDIC), 39 தொழில்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.11,103 கோடி முதலீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாதுகாப்பு த் தொழில்துறை வழித்தடத்தில் தற்போதைய முதலீடு 2,217 கோடி ரூபாய். சாலைகள், மின்சாரம், நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வழித்தடங்களின் மேம்பாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகள்உதவுகின்றன.
2021 செப்டம்பரில் மத்திய பாதுகாப்பு அமைச்சரிடம் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் வழங்கிய குறிப்பாணையில் சோதனை மற்றும் சான்றிதழ் உள்கட்டமைப்பு, டிஆர்டிஓ ஆய்வகங்கள், ஏ இ டபிள்யு சி எஸ் - க்கான வணிக உற்பத்தி அலகுகள், பாதுகாப்பு நிலப் பரிமாற்றம் மற்றும் எச் ஏ எல்- உடன் கூட்டுத்துறை (JV) உருவாக்கம் போன்ற திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், தொடர்புடைய துறை/நிறுவனங்கள் தங்களின் தற்போதைய வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த தகவலை பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட், மார்ச் 21, 2022 அன்று மாநிலங்கள் அவையில் உறுப்பினர் பி வில்சன் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
******
(रिलीज़ आईडी: 1807765)
आगंतुक पटल : 728