நிதி அமைச்சகம்
மும்பையில் வருமான வரித்துறை சோதனை
Posted On:
17 MAR 2022 5:17PM by PIB Chennai
மும்பையை சேர்ந்த கேபிள் நிறுவன சொந்தக்காரர் ஒருவர், மாநில அரசின் பணியாளர் மற்றும் அவரது தொடர்பான தொழில் பிரிவுகளில் 2022 மார்ச் 8 அன்று தேடுதல் நடவடிக்கையை வருமானவரித்துறை மேற்கொண்டது. மும்பை, புனே, சங்கிலி மற்றும் ரத்னகிரியில் உள்ள மொத்தம் 26 இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முக்கியமான அரசியல்வாதி ஒருவர் 2017-ம் ஆண்டு ரூபாய் 1 கோடிக்கு டபோல-யில் நிலம் வாங்கியதும், ஆனால் 2019-ம் ஆண்டில் தான் அது பதிவு செய்யப்பட்டு இருந்ததும் சோதனையின் போது தெரிய வந்தது. சோதனை நடத்தப்பட்ட நபர்கலீல் ஒருவருக்கு இந்த நிலம் 2020-ம் ஆண்டு ரூபாய் 1.10 கோடிக்கு விற்கப்பட்டது கண்டறியப்பட்டது. 2017 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையேயான காலக்கட்டத்தில் இந்த இடத்தில் விடுதி ஒன்று கட்டப்பட்டது.
ஆனால் விடுதி கட்டப்பட்டது குறித்து பதிவுத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் நிலத்தின் மதிப்புக்கு மட்டுமே பத்திரப்பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்டு இருந்தது. ரூ 6 கோடி மதிப்பில் விடுதி கட்டப்பட்டிருந்தாலும் அது குறித்து எவருடைய கணக்கிலும் குறிப்பிடப்படவில்லை.
மாநில அரசுப் பணியாளர் தொடர்பான தேடுதல் நடவடிக்கையின் போது அவர், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புனே, சங்கிலி மற்றும் பாராமதி ஆகிய நகரங்களின் முக்கிய இடங்களில் கடந்த பத்து வருடங்களில் அதிக அளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்து இருந்தது தெரியவந்துள்ளது. பல்வேறு தொழில்களை அவர்கள் நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
ரூபாய் 27 கோடி மதிப்புள்ள போலி பரிவர்த்தனைகள் மற்றும் ரூபாய் 2 கோடி மதிப்பில் கணக்கில் வராத பணத்தின் மூலமான நிலப் பரிவர்த்தனை உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கையின்போது ரூபாய் 60 லட்சம் ரொக்கம் , டிஜிட்டல் தரவுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806981
************
(Release ID: 1807000)
Visitor Counter : 177