சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்கள்

प्रविष्टि तिथि: 16 MAR 2022 2:03PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர்  பிரதிமா பவுமிக் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

மூத்த குடிமக்களுக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் கெளரவமான தற்சார்பு வாழ்க்கை வழங்க பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.  மூத்த குடிமக்களுக்கு தேவையான அன்பு, கவனிப்பு, மருத்துவ மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை மத்திய அரசு அறிந்துள்ளது. இதற்காக, மூத்த குடிமக்களின் நலனுக்கு அடல் வயோ அப்யுதையா திட்டம், மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம், மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டம்ராஷ்ட்ரிய வயோஸ்ரீ திட்டம், மூத்த குடிமக்களுக்கான வாழ்வாதார மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம், முதியோர் நலனுக்கு பெறுநிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை (சிஎஸ்ஆர்) திருப்பிவிடுவது போன்ற  பல திட்டங்களை மத்திய  அரசு அமல்படுத்தி வருகிறது. இவற்றின் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர  பல அமைச்சகங்களும், மூத்த குடிமக்களுக்கான நலத்துறையும், பல திட்டங்களை அமல்படுத்துகின்றன. தேசிய சமூக உதவி திட்டம், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய இயலாமை ஓய்வூதிய திட்டம் போன்றவையும் செயல்பாட்டில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806506

                           ***********************

 


(रिलीज़ आईडी: 1806749) आगंतुक पटल : 1497
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Bengali