நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி பற்றாக்குறை இல்லை

Posted On: 16 MAR 2022 4:12PM by PIB Chennai

நாட்டின் நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்று மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைக் கூறியுள்ள அவர், 09.03.2022 நிலவரப்படி 26.5 மில்லியன் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கோல் இந்தியா நிறுவனம் மற்றும் சிங்கரேனி நிறுவனத்தில்  13.03.2022 நிலவரப்படி முறையே 47.95 மில்லியன் டன் மற்றும் 4.49 மில்லியன் நிலக்கரி  உள்ளது என அவர் கூறியுள்ளார்.

பெருந்தொற்றுக் காரணமாக மின்சாரத் தேவை குறைந்த நிலையில், நிலக்கரி விநியோகம் பாதிக்கப்பட்டது.  2021 ஏப்ரல் ஒன்றாம் தேதி நிலவரப்படி கோல் இந்தியா நிறுவனத்தில் 99.33 மில்லியன் டன்னும், அனல் மின் நிலையங்களில் 28.66 மில்லியன் டன்னும் நிலக்கரி இருப்பில் இருந்தது.

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மின்சாரத் தேவை உயர்ந்து இறக்குமதி நிலக்கரி அடிப்படையிலான மின் நிலையங்களில் குறைந்த அளவு மின் உற்பத்தி மற்றும் பலத்த மழை காரணமாக நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாக, 2021 அக்டோபர் நிலவரப்படி மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு 7.2 மில்லியன் டன்னாக குறைந்தது.  அதனைத் தொடர்ந்து நிலக்கரி விநியோகம் அதிகரித்த காரணத்தால் தற்போது நிலக்கரி உற்பத்தி முறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  31.03.2021 நிலவரப்படி இந்தியாவில் 442 நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வந்தன. 2021 நிதியாண்டின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 716.08 மில்லியன் டன்னாக இருந்தது. வெளிநாடுகளிலிருந்து 215.25 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. மின் நிலையங்களில் மொத்த நுகர்வு 906.13 மில்லியன் டன்னாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806583

***************


(Release ID: 1806715) Visitor Counter : 285
Read this release in: English , Urdu , Marathi