ஜவுளித்துறை அமைச்சகம்
இந்தியப் பட்டுத்தொழில்
प्रविष्टि तिथि:
16 MAR 2022 3:28PM by PIB Chennai
இந்தியப் பட்டுத்தொழில் மூலம் நடப்பாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை 211 மில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டப்பட்டுள்ளது என ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா, ஜர்தோஷ் கூறியுள்ளார்.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், பட்டு ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 2018-19-ஆம் ஆண்டில் 291 மில்லியன் டாலரும், 2019-20 ஆம்ஆண்டில் 247 மில்லியன் டாலரும். 2020-21-ல் 198 மில்லியன் டாலரும் அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டது என அவர் கூறினார்.
கச்சாப்பட்டு உற்பத்தியில் நடப்பாண்டில் 39,500 மெட்ரிக் டன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 26,587 மெட்ரிக் டன் கச்சாப் பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
----
(रिलीज़ आईडी: 1806649)
आगंतुक पटल : 215