சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தேசிய அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிதியுதவி
Posted On:
15 MAR 2022 4:02PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு. ஏ. நாரயணசாமி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
தேசிய அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2020-21-க்கான 100 இடங்களில் அனைத்து இடங்களுக்கும் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேசிய அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2021-22-க்கான 125 இடங்களில் அனைத்து இடங்களுக்கும் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2011-12 முதல் 2021-22 வரை (10.3.2022 வரையில்) மொத்தம் ரூ 165.72 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் முறையே ரூ 32.92 கோடி மற்றும் ரூ 37.34 கோடி(10.03.2022 நிலவரப்படி) வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றி தொடர்புடைய வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேர, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கப்பட்டு வருகிறது.
திட்ட வழிகாட்டுதல்களை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதற்கும் தேவையான மாற்றங்களை துறை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806167
*********
(Release ID: 1806369)