சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம்

Posted On: 15 MAR 2022 3:57PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை  இணை அமைச்சர் திரு. ராம்தாஸ் அதாவாலே எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் காலம்,  வரும் 1ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டது துப்புரவு தொழிலாளர்களின், சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கும், அபாயகரமான கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதை  குறைக்கவும் உதவும்.  

துப்புரவு தொழிலாளர்களின் தேசிய ஆணையத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.43.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கையால் கழிவுகளை அகற்றுபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கான உதவியை ஆணையம் வழங்கும்.

துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள்:

(a) துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட திட்டங்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தல். 

(b)  துப்புரவு தொழிலாளர்களுக்கான, குறிப்பாக கழிவுகளை அகற்றுபவர்களுக்கான சமூக பொருளாதார மறுவாழ்வு திட்டங்களை ஆய்வு செய்து அமல்படுத்துதல்;

(c) துப்புரவு தொழிலாளர்களின் புகார்களை விசாரிப்பது மற்றும் அவர்களுக்கான திட்டங்களை அமல்படுத்தாதது குறித்து தானாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளுதல்:

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806155

************



(Release ID: 1806359) Visitor Counter : 172


Read this release in: English , Urdu