விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்
Posted On:
15 MAR 2022 5:31PM by PIB Chennai
2020-21-ல் 7,439.66 கோடி மதிப்பிலான 2,158.89 மெட்ரிக் டன் கரிஃப் பருவ பொருட்களும், இதே காலத்தில் 5,718.03 கோடி மதிப்பிலான 2,404.61 மெட்ரிக் டன் ரபி பருவ பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த அவர், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த மாநிலம் மற்றும் மாவட்ட நிலைகளில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாக கூறினார்.
பல மாநிலங்களில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான தொடர்பு முகமைகளும் பகுதி வாரியான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். ஏற்றுமதி வாய்ப்புகளை மதிப்பீடு செய்யவும், கண்டறியவும், வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களில் காணொலி காட்சி மூலம் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. அதே போல் வாங்குவோர் விற்போர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இது தவிர குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு அதிக வாய்ப்புள்ள 8 பொருட்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. திராட்சை, மாம்பழம், வாழைப்பழம், மாதுளை, வெங்காயம், அரிசி ஆகியவை இதில் அடங்கும் என்ற விவரங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806234
*********
(Release ID: 1806319)