விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பதிவு செய்யப்பட்ட விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள்

Posted On: 15 MAR 2022 5:30PM by PIB Chennai

நாட்டில் 7059 பதிவு செய்யப்பட்ட விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர், மாநில வாரியாக இயங்கும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் சிறு விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் 13 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளும், நபார்டு வங்கியின் கீழ் 264 அமைப்புகளும், மத்தியத்துறை திட்டத்தின் கீழ் 133 அமைப்புகளும் என மொத்தம் 410 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளன.

சிஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் 352 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.14.05 கோடி தொகை மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 225 மகளிர் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

 கூடுதல் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806232

***************



(Release ID: 1806279) Visitor Counter : 227


Read this release in: English , Urdu , Manipuri