விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமை வேளாண்மைக்கு ஊக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAR 2022 4:23PM by PIB Chennai

இயற்கை வேளாண்மையை பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம், கங்கை ஆற்றின் கரைகளில் தீவிர இயற்கை வேளாண்மை திட்டம் ஆகியவற்றின் மூலமாக ரசாயன கலப்பற்ற வேளாண்மையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

 பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, விதைகள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள், இயற்கை உரம், மண்புழு உரம், தாவரச்சாறு உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களுக்காக ஹெக்டேருக்கு ரூ.31,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள், உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்கவும், பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்குவதுடன், தங்களது இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதலுக்கும் ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கங்கை புத்துயிர் ஊட்டம் திட்டத்தின் கீழ் ரூ.120.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதில் 6181 தொகுப்புகளும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 620 ஹெக்டேர் நிலமும் அடங்கும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயன உரங்களை பயன்படுத்தியதால் ஏற்படும் விளைவுகளை கண்டறிய அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதன் மூலம் மண்வள சோதனை நடத்தப்பட்டு, ரசாயன உர பயன்பாட்டை குறைத்து மண்வளத்தை  பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்தார்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1806227) வருகையாளர் எண்ணிக்கை : 210
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu