உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

முன்னுரிமைத் துறைக்கான கடன் வசதிகள்

Posted On: 15 MAR 2022 12:51PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த உணவுப் பதப்படுத்தல் துறை இணை அமைச்சர் திரு. பிரகலாத் சிங் படேல் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

4.09.2020 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதல்களின்படி, அனைத்து உணவு மற்றும் வேளாண் செயலாக்க நடவடிக்கைகளும் முன்னுரிமைத் துறைக் கடன் வழங்குதலின் கீழ் தகுதியானவையாக சேர்க்கப்பட்டுள்ளன.

உணவு பதப்படுத்துதல் துறையை ஊக்குவிப்பதற்காக குறைந்த வட்டி விகிதங்களில் கடன் வழங்குவதற்காக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) ரூ 2000 கோடி சிறப்பு நிதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் கீழ், தனிப்பட்ட தொழில்முனைவோர், கூட்டுறவுகள், விவசாய உற்பத்தி நிறுவனங்கள், கார்ப்பரேட்கள், கூட்டு நிறுவனங்கள், சிறப்பு நோக்க அமைப்பு மற்றும் உணவுப் பதப்படுத்தும் பிரிவுகளை நிறுவுதல், நவீனப்படுத்துதல், விரிவாக்கம் செய்தல் மற்றும் உணவுப் பூங்காக்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்காக அரசால் ஊக்குவிக்கப்படும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. 

உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் மெகா உணவுப் பூங்காக்கள் தவிர, பல்வேறு மாநிலங்களில் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட பிற உணவுப் பூங்காக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 31.1.2022 வரை, ரூ. 466.26 கோடி கடன் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவதற்கும் தற்சார்பு இந்தியாதிட்டத்தின் ஒரு பகுதியாக உணவு பதப்படுத்தும் தொழில்துறைக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம்  அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் மூன்று பரந்த கூறுகளைக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806081

 

******



(Release ID: 1806222) Visitor Counter : 204


Read this release in: English , Urdu , Bengali