ஜல்சக்தி அமைச்சகம்
வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு: தமிழகத்தில் உள்ள நிலையங்களின் எண்ணிக்கை
Posted On:
14 MAR 2022 4:28PM by PIB Chennai
மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்த ஜல் சக்தி இணை அமைச்சர் திரு. பிஷ்வேஸ்வர் துடு கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
2016-ம் ஆண்டு பருவமழையை தொடர்ந்து நாட்டில் வெள்ளம் ஏற்படக்கூடிய 20 முக்கிய ஆற்றுப்படுகைகளுக்கான ஐந்து நாள் வெள்ள முன்னறிவிப்பு முறையை மத்திய நீர் ஆணையம் உருவாக்கி வருகிறது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த அமைப்புகள் ஜிபிஎம் (குளோபல் பெரசிப்பிடேஷன் மேனேஜ்மெண்ட்) ஜிஎஸ்எம்ஏபி (குளோபல் சேட்டிலைட் மேப்பிங் ஆஃப் பெரசிபிடேஷன்- ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சியின் தயாரிப்பு) மற்றும் ஐஎம்டி (இந்திய வானிலை ஆய்வுத் துறை) ஆகியவற்றின் சர்வதேச மழைப்பொழிவு மாதிரியை பயன்படுத்துகின்றன.
இவற்றின் அடிப்படையில் வெள்ள முன்னறிவிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்காக, 20 முக்கிய நதிப் படுகைகளுக்கு 1-டி கணித வெள்ள முன்னறிவிப்பு மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனைகள் https://120.57.99.138/ எனும் இணைப்பின் மூலம் அனைவரும் காணலாம்.
இந்திய அளவில் 2016 வரை 199 ஆக இருந்த வெள்ள முன்னறிவிப்பு நிலையங்களின் எண்ணிக்கை, தற்போது 331 ஆக இருக்கிறது. தமிழகத்தில் 2016 வரை 5 ஆக இருந்த வெள்ள முன்னறிவிப்பு நிலையங்களின் எண்ணிக்கை, தற்போது 15 ஆக இருக்கிறது.
வெள்ள முன்னறிவிப்பு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாட்டிற்கு 2018-19-ல் ரூ 26.75 லட்சமும், 2019-20-ல் ரூ 38.66 லட்சமும், 2020-21-ல் ரூ 269.04 லட்சமும், 2021-22-ல் ரூ 215.68 லட்சமும் என மொத்தம் ரூ 550.13 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805818
**********************
(Release ID: 1805944)