தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள்: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம்

प्रविष्टि तिथि: 14 MAR 2022 4:00PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர வேலைவாய்ப்பு- வேலைவாய்ப்பின்மை ஆய்வின் படியும், 2017-18, 2018-19 and 2019-20 ஆண்டுகளில் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய ஆய்வின்படியும் வேலைவாய்ப்பின்மை விவரங்கள் வருமாறு:

2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர வேலைவாய்ப்பு- வேலைவாய்ப்பின்மை ஆய்வின்படி அகில இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.7 மற்றும் 3.9 ஆகவும், 2017-18, 2018-19 and 2019-20 ஆண்டுகளில் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய ஆய்வின்படி அகில இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.0, 5.8 மற்றும் 4.8 ஆகவும் இருந்தது.

2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர வேலைவாய்ப்பு- வேலைவாய்ப்பின்மை ஆய்வின்படி தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.8 மற்றும் 3.7 ஆகவும், 2017-18, 2018-19 and 2019-20 ஆண்டுகளில் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய ஆய்வின்படி அகில இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.5, 6.6 மற்றும் 5.3 ஆகவும் இருந்தது.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் பெருக்குவதும் அரசின் முன்னுரிமை ஆகும். இந்த நோக்கத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து தொழில்களை மீட்பதற்காக தற்சார்பு இந்தியா ஊக்கத் தொகுப்பை அரசு அறிவித்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805787

                                ********************

 

 


(रिलीज़ आईडी: 1805916) आगंतुक पटल : 370
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Manipuri