தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாள் சக்தியில் பெண்கள் பங்கேற்பு

Posted On: 14 MAR 2022 3:56PM by PIB Chennai

தமிழ்நாட்டில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 38.3 சதவீதத்தினர் பல்வேறு தொழில்களில் பணியாற்றி வருவதாக மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மத்திய புவியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்துக்கு உட்பட்ட தேசிய புள்ளியியல் அலுவலகம் மேற்கொள்ளும்  ஆய்வின் அடிப்படையில், நாட்டின் வேலை பார்ப்போர் மற்றும் வேலையில்லாதோர் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

2019-20-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய ஆய்வின்படி, 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண்கள் 73 சதவீதம் அளவிற்கும், பெண்கள் 28.7 சதவீதம் அளவிற்கும் பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது.  அதிகபட்சமாக இமாச்சலப்பிரதேசத்தில் 63.1 சதவீதம் பெண்கள், பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் 38.3 சதவீதம் பெண்கள் பணியாற்றி வருவதாகவும், அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை பார்ப்போர் பட்டியலில், பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், வேலையின் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், தொழிலாளர் சட்டங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சமவாய்ப்பு அளிக்கவும் பணியிடங்களில் பெண்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805783

*************** 



(Release ID: 1805900) Visitor Counter : 260


Read this release in: English , Urdu