வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு வளர்ச்சி நிதி நிறுவனம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2022 2:20PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்த வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஸ்டார்ட் அப் முதலீட்டு விழா;  15.02.2022 முதல் 15.03.2022 வரை வட கிழக்கு வளர்ச்சி நிதி கார்ப்பரேஷன் லிமிடெட் (NEDFi) ஏற்பாடு செய்துள்ளது.

உள்ளூர் தொழில்முனைவோர் வணிக யோசனைகளை வெளிப்படுத்தவும், அவர்களது வர்த்தகங்களை அதிகரிக்கத் தேவையான மூலதன அணுகலை வழங்கவும் இந்த நிகழ்வு உதவும். மேலும் வழிகாட்டுதல், ஆலோசனை, சந்தைப்படுத்தல் ஆதரவு போன்ற பிற வசதிகளைப் பெறவும் இது அவர்களுக்கு உதவும்.

வடகிழக்கு பிராந்தியத்தின் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோரை அணுகி, இப்பகுதியில் ஸ்டார்ட்-அப் சூழலை மேம்படுத்துவது இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான காரணம் ஆகும்.

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆகியவற்றால் ஊக்குவிக்கப்படும் வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரத்யேக நிதியாக நார்த் ஈஸ்ட் வென்ச்சர் ஃபண்ட் விளங்குகிறது. செப்டம்பர், 2017-ல் ரூ 100 கோடி உடன் இது தொடங்கப்பட்டது. வடக்கு-கிழக்கு பிராந்தியங்களில் ஸ்டார்ட்-அப்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805727

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1805851) வருகையாளர் எண்ணிக்கை : 196
இந்த வெளியீட்டை படிக்க: English , Manipuri