மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
சவுராஷ்டிரா மல்தாரி சம்மேளனத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா உரை
Posted On:
12 MAR 2022 6:44PM by PIB Chennai
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள உப்லேட்டாவில் சஹ்ஜீவன் ஏற்பாடு செய்திருந்த சௌராஷ்டிரா மல்தாரி சம்மேளனத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா இன்று உரையாற்றினார். அழிந்து வரும் கால்நடைகளின், குறிப்பாக ஹலாரி இனக் கழுதைகளைப் பாதுகாப்பது குறித்து சம்மேளனம் ஆலோசித்தது.
கூட்டு முயற்சிகளுக்காக பங்குதாரர்களை ஒன்றிணைத்து ஆலோசனைக் குழுவை அமைப்பது; இனப்பெருக்கம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட உள்கட்டமைப்புடன் கூடிய திட்டங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதற்கான தேவை; பால் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் குறித்தும் சம்மேளனத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சக அதிகாரிகள், மாநில கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
சஹ்ஜீவன் தொகுத்த ‘இந்தியாவின் மேய்ச்சல் இனங்கள்’ என்ற புத்தகத்தை திரு பர்ஷோத்தம் ரூபாலா வெளியிட்டார். மல்தாரிகளுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர், கால்நடைத் துறையின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக தேசிய கால்நடை இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஹலாரி இனக் கழுதைகளைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது அவசியம் என்று திரு ரூபாலா மேலும் கூறினார். மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சக உதவி ஆணையர் டாக்டர் டெபோலின மித்ரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
சௌராஷ்டிராவின் ஜாம்நகர் மற்றும் குஜராத் மாநிலத்தின் துவாரகா மாவட்டத்தின் அரை வறண்ட நிலப்பரப்பில் உள்ள முக்கியமான கால்நடைகளில் ஹலாரி கழுதை இனம் ஒன்றாகும். இதன் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஹலாரி இனைத்தை காப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கபப்ட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805377
******************
(Release ID: 1805400)
Visitor Counter : 195