தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மத்திய அறங்காவலர் குழுவின் 230-வது கூட்டம், குவஹாத்தியில் மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்றது

Posted On: 12 MAR 2022 5:19PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மத்திய அறங்காவலர் குழுவின் 230-வது கூட்டம், குவஹாத்தியில்  இன்று மத்திய  தொழிலாளர் & வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் & பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்றது.

 வாரியத்தின் துணைத் தலைவரான தொழிலாளர் & வேலைவாய்ப்பு இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தேலி,  துறையின் செயலாளர்  திரு சுனில் பர்த்வால், வைப்பு நிதி அறக்காவலர் குழுவின் உறுப்பினர் – செயலாளர் திருமதி நீலம்  ஷாமினி ராவ், மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  இதில் வட்டி விகிதம் நிர்ணயம் தவிர, வைப்பு நிதி அலுவலகங்களில் விளையாட்டுத்துறை ஒதுக்கீடான 5%  பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை கொண்டு பூர்த்தி செய்வதற்கான  வழிமுறைகளை வகுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  மேலும்  பங்கு முதலீடுகளை திரும்ப பெற்றதன் மூலம் பிப்ரவரி 2022-ல் கிடைத்த ரூ.5529.7 கோடியை 2021-22- ஆண்டுக்கான வருவாயில் சேர்க்கவும் அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்தது. அத்துடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை பணமாக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இதன் மூலம் ரூ.7772.50 கோடி மதிப்புள்ள பங்குகளுக்கு தற்போது ரூ.8944.32 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805355

***************


(Release ID: 1805369) Visitor Counter : 277