நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் மார்ச் 14 முதல் 20 வரை “நுகர்வோர் அதிகாரமளிக்கும் வாரத்திற்கு” நுகர்வோர் விவகாரத் துறை ஏற்பாடு
Posted On:
12 MAR 2022 1:57PM by PIB Chennai
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இந்தியாவின் 75 ஆண்டுகளையும், அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றையும் கொண்டாட 2022 மார்ச் 14 முதல் 20 வரை “நுகர்வோர் அதிகாரமளிக்கும் வாரத்திற்கு” நுகர்வோர் விவகாரத் துறை ஏற்பாடு செய்கிறது.
மார்ச் 15-ம் தேதி அனுசரிக்கப்படும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்துடன் இந்த கொண்டாட்டங்கள் இணைந்துள்ளன. இது தொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் பல நடவடிக்கைகளை நுகர்வோர் விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்யும்.
கொண்டாட்டத்தின் தொடக்க நாளில், துறையின் கீழ் உள்ள நிறுவனங்களின் களப் பிரிவுகளான, இந்திய தரநிலைகள் அலுவலகம் (பிஐஎஸ்), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் லீகல் மெட்ராலஜி (ஐஐஎல்எம்) ராஞ்சி, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்), நேஷனல் டெஸ்ட் ஹவுஸ் (என்டிஎச்) மற்றும் பிராந்திய தரநிலை ஆய்வகங்கள் 75 கிராமங்களில் கிராமப்புற மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை நடத்தும்.
தேசிய நுகர்வோர் உதவி எண், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் அம்சங்கள், பிஐஎஸ் தரநிலைகள், பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களின் விவரங்கள், ஐஎஸ்ஐ குறியீடுள்ள பிரஷர் குக்கர்களின் பயன்பாடு மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்புடைய பல்வேறு முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை இந்தத் திட்டங்கள் உருவாக்கும். ஹெல்மெட். ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளை வாங்குதல் மற்றும் சரியான எடை மற்றும் அளவைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வும் உருவாக்கப்படும்.
உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தைக் கொண்டாடும். முக்கிய நிகழ்வு மார்ச் 15, 2022 அன்று புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "நியாயமான டிஜிட்டல் நிதி" என்பது இந்த ஆண்டின் மையக்கருத்தாகும். மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே, தேசிய நுகர்வோர் இடர் தீர்வு ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆர் கே அகர்வால், இன்ஃபோசிஸின் நிர்வாகம் சாரா தலைவர் திரு நந்தன் நீலேகனி மற்றும் பிற உயரதிகாரிகள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவாதிக்க சிறப்பு
அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிஐஎஸ், ஆர்ஆர்எஸ்எல் மற்றும் என்டிஎச் ஆகியவற்றின் 75 ஆண்டுகால அறிவியல் மற்றும் நிறுவனப் பயணம் குறித்த மெய்நிகர் கண்காட்சியையும் துறை தொடங்குகிறது.
மார்ச் 16-17 அன்று மின்-வணிகம் குறித்த காணொலி மாநாடு ஏற்பாடு செய்யப்படும். மைகவ் உடன் இணைந்து வினாடி வினா நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நுகர்வோர் அதிகாரமளிக்கும் வாரத்தை நினைவுகூர 20 மார்ச் 2022 வரை மேலும் பல செயல்பாடுகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805317
***************
(Release ID: 1805346)
Visitor Counter : 255