தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

“ட்ராய் சட்டத்தின் 25 ஆண்டுகள்’’ குறித்த கருத்தரங்கை திரு அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைக்கிறார்

Posted On: 12 MAR 2022 10:45AM by PIB Chennai

 ‘’ட்ராய் சட்டத்தின் 25 ஆண்டுகள்; சம்பந்தப்பட்டவர்களுக்கான ( தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு, ஐடி, ஏஇஆர்ஏ, ஆதார்) முன்னேற்றம்’’ என்ற கருத்தரங்கை, மத்திய தொலைத் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் நாளை  புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார். இந்திய தொலைத்தடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) 25 ஆண்டுகால பயணத்தைக்குறிக்கும் வகையில், தொலைத்தொடர்பு தாவா தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்கிறது.

 தொலைத்தொடர்பு, ஒலிபரப்பு,ஐடி, விமானநிலைய உள்கட்டமைப்பு மற்றும் ஆதார் பிரிவுகள் ஆகியவற்றில் தொடர்புடையவர்களுக்கு இடையிலான தாவா தீர்வு உள்ளிட்ட ஒழுங்குமுறை தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு, நீதித்துறை, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

 இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குவதற்காக, ட்ராய் சட்டம் 1997-ம் ஆண்டு இயற்றப்பட்டது. சந்தையில் நியாயமான போட்டியை ஏற்படுத்தவும், சமமான, வெளிப்படையான சூழலை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805272

***************



(Release ID: 1805327) Visitor Counter : 174