புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஜனவரி மாத தொழிற்சாலை உற்பத்திக் குறியீடு மதிப்பீட்டுப் பட்டியல் வெளியீடு

Posted On: 11 MAR 2022 5:30PM by PIB Chennai

தொழிற்சாலை உற்பத்திக் குறியீடு  மதிப்பீட்டுப்  பட்டியல் 6 வார கால தாமதத்துடன் ஒவ்வொரு மாதம் 12ம் தேதியும், அன்றைய தினம் விடுமுறையாக இருந்தால், முந்தைய நாளிலும் வெளியிடப்படுகிறது.

2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொழிற்சாலை உற்பத்திக் குறியீடு  மதிப்பீட்டுப்  பட்டியல் 2011-12 அடிப்படையுடன் 138.4 ஆக உள்ளது. சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத்  துறைகளின் அளவீடுகள் முறையே 124.7, 138.1, 165.6 ஆக உள்ளன.

பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின் படி, முதல்நிலை பொருட்களின் அளவு 136.5 ஆகவும், மூலதனப் பொருட்களின் அளவு 91.9-ஆகவும், நடுத்தரப்  பொருட்களுக்கான அளவு 151.1 ஆகவும் உள்ளன. நீண்டகால உபயோகத்தில் உள்ள நுகர்வு ப்  பொருட்களின் அளவு 119.8 ஆகவும், அடிக்கடி வாங்கப்படும் நுகர்வுப்  பொருட்களின் அளவு 152.9 ஆகவும் உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட இணைப்பில் உள்ள பட்டியலைப்  பார்க்கவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805110

                                                                                **********************

 


(Release ID: 1805228) Visitor Counter : 214
Read this release in: English , Urdu , Marathi