அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் தகவல் தொடர்பு குறித்த தேசியக் கருத்தரங்கு: சிஎஸ்ஐஆர் - என்ஐஎஸ்சிபிஆர் இணைந்து நடத்தியது

Posted On: 11 MAR 2022 5:30PM by PIB Chennai

அறிவியல் தகவல் தொடர்பு குறித்த தேசிய கருத்தரங்கை மத்திய அறிவியல் தொழிலியல்  ஆராய்ச்சி கவுன்சில் ( சிஎஸ்ஐஆர்) மற்றும் அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய மையம் ஆகியவை இணைந்து நடத்தியன.

அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்வது மிகவும் சவாலானதாக உள்ளது.  தற்போது அசாதாரணத்  தகவல்கள் கிடைக்கின்றன. அதில் தேவையற்றதை அகற்றி தகவல்களை தெரிவிப்பது சவாலான பணியாக உள்ளது. நேற்று நடந்த இந்தக்  கருத்தரங்கில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜய் ராகவன் உரையாற்றினார்.  இந்தக்  கருத்தரங்கம் புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்-என்பிஎல் ஆடிட்டோரியத்தில் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடத்தப்பட்டது. அறிவியல் தகவல் தொடர்பை வளர்ப்பது - அறிவியல் தகவல் தொடர்பாளர்களை ஊக்குவிப்பது போன்றவைதான் இந்தக்  கருத்தரங்கின் மைய பொருள். இந்தக்  கருத்தரங்கில் அறிவியல் தகவல் தொடர்பில் ஈடுபட்டுள்ள 15 நிறுவனங்கள் ஒரே  தளத்தில் இணைந்து அறிவியல் தகவல் தொடர்பு முயற்சிகளை வலுப்படுத்துவது பற்றி தங்கள் கருத்துக்களைப்  பகிர்ந்து கொண்டனர்.

 

இந்த கருத்தரங்கில் தலைமை உரையாற்றிய சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் டாக்டர் சேகர் சி.மாண்டே, ‘‘ நாங்கள் சிறந்த தகவல் தொடர்பாளர்களாக இருக்க வேண்டும் என்பதில் சிஎஸ்ஐஆர் உறுதியாக உள்ளது என்றார்.

விஞ்ஞானியாக அறிவியல் தகவல் தொடர்பில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தையும், கடந்த 100 ஆண்டுகளில் தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும்  நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

சிஐஎஸ்ஆர்-என்ஐஎஸ்சிபிஆர் இயக்குனர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் பேசுகையில், சரியான தகவல்களை சரியான விதத்தில் மக்களுக்குத்  தெரிவிப்பதை விளக்கினார். விஞ்ஞானிகளின் ஆய்வுக்  கட்டுரைகளை விட, அறிவியல் அடிப்படையில் கதைகள் இன்னும் அதிகம் தேவை என அவர் வலியுறுத்தினார்.

இந்தக்  கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்ட டிசிஎஸ் ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சர்மிளா மாண்டே, கூறுகையில், ‘‘ஆய்வுக்  கூடங்களின் பணி, மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறது என்றும், அறிவியல் உலகில் என்ன நடக்கிறது என்பதைப்  பள்ளிக் குழந்தைகள் அறிய வேண்டும்’’ என்று கூறினார். 

எதிர்கால மருத்துவம், தடுப்பு மற்றும் அறிவியல் முன்னேற்றங்களைச்  சார்ந்து இருக்கப்போகிறது எனவும் அவர் கூறினார்.  அறிவியல் முயற்சிகள், புத்தகம், அனிமேஷன் வடிவில் எளிமையான முறையில் அறியப்பட வேண்டும் என்றார்..

சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் வேணுகோபால் பேசுகையில், ‘‘வெளிநாட்டு இதழ்களின் ஆய்வுக்  கட்டுரைகளை மட்டும் தெரிவிப்பதில்  அறிவியல் தகவல் தொடர்பாளர்கள் கவனம் செலுத்தாமல், உள்ளூர் பிரச்னைகளைத்  தீர்ப்பதற்கான ஆய்வுகளிலும் ஈடுபடவேண்டும்’’ என்றார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்திக்  குறிப்பைக்  காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805115

                                                                                **********************

 



(Release ID: 1805206) Visitor Counter : 193


Read this release in: English , Hindi