பாதுகாப்பு அமைச்சகம்
தொழில்துறை தலைமையிலான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான 18 முக்கிய தளங்களை பாதுகாப்பு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது
Posted On:
11 MAR 2022 6:17PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கு பார்வைக்கு குறிப்பிடத்தகுந்த ஊக்கமளிக்கும் வகையில், பாதுகாப்பு துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பட்ஜெட்டில் 25% நிதி தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும் என்று 2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
பல்வேறு வகைகளில் தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 18 முக்கிய தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பட்டியல் பின்வருமாறு:
மேக்-1
ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம்
எரிசக்தி ஆயுதங்கள் (300 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்டவை) [அதிக சக்தியுடைய மின்காந்த சாதனங்கள் மற்றும் உயர் ஆற்றல் கொண்ட லேசர் சாதனங்கள்]
கடற்படை கப்பல் ஆளில்லா வான்வழி அமைப்பு
இலகு பீரங்கி
சுரங்கத் துறைகள்
ஆளில்லா தன்னாட்சி ஏ1 அடிப்படையிலான நில ரோபோ
127 மிமீ கடற்படை துப்பாக்கி
127 மிமீ வழிகாட்டி எவு கணை
கப்பல்களுக்கான மின்சார உந்துவிசை இன்ஜின்கள்.
வான்வழி ஜாமர்
லிதியம் -அயனி செல்கள்/ லிதியம் -கந்தக செல்கள்
தகவல் தொடர்பு அமைப்பு
உயர் தெளிவுத்திறன் உணர்திறனுடன் எலக்ட்ரோ ஆப்டிகல் பாட்
அதிக உயரத்தில் ராணுவ வீரர்களுக்கான உள்கட்டமைப்பு
பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறை 2020-ன் கீழ், இந்தியத் தொழில்துறையின் அதிகப் பங்களிப்பை உள்ளடக்கி தற்சார்பை அடைவதை ‘மேக்’ வகை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உபகரணங்கள், அமைப்புகள், முக்கிய தளங்கள் அல்லது தொழில்துறையின் மேம்படுத்தல்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட திட்டங்கள் இந்த வகையின் கீழ் எடுக்கப்படலாம். மேக்-I துணைப்பிரிவின் கீழ் உள்ள திட்டங்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் முன்மாதிரி தயாரிப்புக்கான மொத்த செலவில் 70% வரை நிதி உதவி வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805135
**********************
(Release ID: 1805203)