அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

प्रविष्टि तिथि: 10 MAR 2022 4:06PM by PIB Chennai

கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி பயன்படுத்தும் புதிய யுக்தியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான ஆராய்ச்சியில் கார்பனை உறிஞ்சி பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது. இதில் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்கனவே செய்து காட்டப்பட்டிருந்தாலும், எந்தத் தொழில்நுட்பமும் , கார்பனை முற்றிலும் அகற்றும், குறைந்த செலவிலான தீர்வை அளிக்கவில்லை. ஆகையால், புதிய திட உறிஞ்சிகள் பற்றிய ஆராய்ச்சி, கார்பன்டை ஆக்சைடு உறிஞ்சப் பயன்படுத்தும் முக்கியமான பொருளை வழங்கும்.

 மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை உதவியுடன், கொல்கத்தாவில் உள்ள அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையத்தில் (ஐஐஎஸ்இஆர்) பணியாற்றும்  பேராசிரியர் ராகுல் பானர்ஜி குழு புத்தாக்க திட்டத்தின் கீழ், இந்த புதிய திட உறிஞ்சி யுக்தியைக் கண்டுபிடித்துள்ளனர்.  இதற்காக பேராசிரியர் பானர்ஜி தலைமையிலான குழுவினர்,  சிறப்பு வகை நேனோ துகள்களை கண்டுபிடித்துள்ளனர். இவை கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும்.

 இந்தப் புதிய வகை பொருட்களின் இயற்பியல் பண்புகள் குறித்து ‘அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804748

                              ***************
 


(रिलीज़ आईडी: 1804829) आगंतुक पटल : 395
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी