அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

யூரியா மின்னாற்பகுப்பு மூலம், யூரியா கழிவில் இருந்து ஆற்றல் மிக்க ஹைட்ரஜன் உற்பத்தி: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Posted On: 09 MAR 2022 4:11PM by PIB Chennai

ஆற்றல் திறன் மிக்க ஹைட்ரஜன் உற்பத்திக்கு, யூரியா மின்னாற்பகுப்பு உதவியுடன் ஒரு மின் வினையூக்கியை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

யூரியா மின்னாற்பகுப்பு முறை, குறைந்த செலவிலான ஹைட்ரஜன் உற்பத்தியுடன்யூரியா அடிப்படையிலான கழிவு சுத்திகரிப்புக்கு உதவுகிறது. இந்த முறையை நாட்டின் எரிசக்தி உற்பத்திக்கு பயன்படுத்த முடியும்.

யூரியா மின்னாற் பகுப்பு முறையில், தண்ணீர் மின்னாற்பகுப்பு மூலம் ஹைட்ரஜன் உற்பத்திக்கு தேவைப்படும் எரிசக்தியில் 70 சதவீதம் குறைக்க முடியும். தண்ணீர் பிரிப்பு, ஆக்ஸிஜன் உற்பத்தில் ஆற்றல் மிக்க எதிர்பொருளை, யூரியா மின்னாற்பகுப்பில் யூரியா ஆக்ஸினேற்றம் மூலம் மாற்ற முடியும். குறைந்த செலவில், பூமியில் அபரிமிதமாக கிடைக்கும் நிக்கல் அடிப்படையிலான வினையூக்கியை இந்த முறையில் அதிகமாக பயன்படுத்த முடியும்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தன்னாட்சி அமைப்பான நானோ மற்றும் சாப்ட் மேட்டர் அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் திரு அலெக்ஸ் சி, திரு கவுரவ் சுக்லா, திரு முகமது சபீர் , டாக்டர் நீனா எஸ்.ஜான் ஆகியோர், ஹைட்ரஜன் உற்பத்திக்கு,   இந்த நிக்கல் ஆக்ஸைடு  அடிப்படையிலான யூரியா மின்னாற்பகுப்பு முறையை  கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வு கட்டுரை ‘எலக்ட்ரோகெமிக்கா ஆக்டா’ மற்றும் மெட்டீரியல் கெமிஸ்ட்ரி’ என்ற இதழ்களில் வெளியாகியுள்ளது.

இந்த யூரியா மின்னாற்பகுப்பு, யூரியா அடிப்டையிலான கழிவு சுத்திகரிப்பு மற்றும் குறைந்த செலவில் ஹைட்ரஜன் உற்பத்திக்க உதவியாக உள்ளது. யூரியாவை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவில் ஒன்று. கடந்த 2019-20ம் ஆண்டில் 244.55 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை இந்தியா உற்பத்தி செய்தது. இந்த யூரியா உர உற்பத்தி ஆலைகள், அதிக செறிவுள்ள அம்மோனியா மற்றும் யூரியாவை கழிவுகளாக வெளியேற்றுகின்றன. இவற்றை நாட்டின் எரிசக்தி உற்பத்திக்கு பயன்படுத்த முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:   

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804399

                           **********************

 



(Release ID: 1804578) Visitor Counter : 271


Read this release in: English , Hindi