ஆயுஷ்

பொது அக்கறை உள்ள துறைகளில் இணைந்து செயல்பட ஆயுஷ் அமைச்சகம், சிஎஸ்ஐஆர் மற்றும் ஐசிஏஆர் இடையே முத்தரப்பு ஒப்பந்தம்: மூலிகை ஆராய்ச்சி தொடர்பான வேளாண் தொழில்நுட்பங்கள் மேம்படும்

Posted On: 08 MAR 2022 2:50PM by PIB Chennai

மூலிகை ஆராய்ச்சி தொடர்பான வேளாண் தொழில்நுட்பங்கள் மேம்படுத்ததுவும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கு பயனளிக்கும் வகையில் அதன் மதிப்புக்  கூட்டுப்  பொருட்களை உருவாக்குவதில்  இணைந்து செயல்படவும்  சிஎஸ்ஐஆர் மற்றும் ஐசிஏஆர் அமைப்புடன்  முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஆயுஷ் அமைச்சகம் கையெழுத்திட்டது. 

இந்த ஒப்பந்தத்தில் ஆயுஷ் அமைச்சகச்  செயலாளர் வைத்தியா  ராஜேஷ் கொடேச்சா, ஐசிஏஆர் தலைமை இயக்குனர் டாக்டர் த்ரிலோசன் மொஹபத்ரா, சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் டாக்டர் சேகர் சி.மாண்டே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்தியப்  பாரம்பரிய வேளாண் முறைகளின் அறிவாற்றலைப்  பெற்று, நாட்டின் சமூகப்  பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் மதிப்பீடு செய்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்  பணிகளை மேற்கொள்வதுதான் இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்.

இந்நிழ்ச்சியில், ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்தியா  ராஜேஷ் மொடேச்சா, விரிக்ஸ்ஆயுர்வேதம், மிரிக்ஆயுர்வேதம் போன்றவற்றில் மதிப்பு மிக்க பாரம்பரிய  அறிவு பற்றி விளக்கினார். மனிதர்களுக்கு மட்டும் அல்லாது விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த விவசாயத்தை மேற்கொள்ள, பாரம்பரிய அறிவியல் நடைமுறைகளை மதிப்பீடு செய்வதில் ஒத்துழைப்பு முக்கியமானது என அவர் கூறினார்.  ஆயுர்வேத உணவு மற்றும் 2023-ல் சர்வதேச தினைகள் ஆண்டை கொண்டாடுவது குறித்தும் அவர் பேசினார்.  இந்தியாவின் பாரம்பரிய உணவுகள் அடிப்படையில் ஆரோக்கியமான உணவுப்  பழக்கவழக்கங்களை ஊக்கவிப்பதில்  முத்தரப்புப்  பங்கு குறித்தும் அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஐசிஏஆர் தலைமை இயக்குனர் டாக்டர் த்ரிலோசன் மொஹபத்ரா, உணவு மற்றும் வேளாண்மை குறித்த தேசிய இலக்ககுகளை உறுதி செய்வதில்,   இந்த முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து,  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்றார்.

கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில், பாரம்பரிய மருந்துகளை ஊக்குவித்ததில் தோட்டக்கலை உட்பட வேளாண் துறையில் சிஎஸ்ஐஆர், ஐசிஏஆர், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றை சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் டாக்டர் சேகர் சி. மாண்டே பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்திக்  குறிப்பைக்  காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803909

***********



(Release ID: 1804088) Visitor Counter : 169


Read this release in: Urdu , English , Hindi