அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆரியபட்டா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐஐடி-ரூர்கி மாணவர்கள் கூட்டாக முனைவர் பட்டங்களை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 05 MAR 2022 4:04PM by PIB Chennai

கூர்நோக்கு அறிவியலுக்கான ஆரியபட்டா ஆராய்ச்சி நிறுவனம் (ARIES) மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) – ரூர்கி மாணவர்கள், விரைவில் கூட்டாக முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளவும், ஆரிய பட்டா ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள மற்றும்  புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள வசதிகளை பயன்படுத்தி அந்த நிறுவனத்தில் ஐஐடி ரூர்கி மாணவர்கள் ப்ராஜெட்டுகளை மேற்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற நிறுவனமான, கூர்நோக்கு அறிவியலுக்கான ஆரியபட்டா ஆராய்ச்சி நிறுவனம் (ARIES) ஐஐடி – ரூர்கியுடன் பரஸ்பர நலன் பயக்கும் வகையில் கல்வி சார்ந்த ஒத்துழைப்புகளை மேற்கொள்ள  கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இது சாத்தியமாகும்.

இந்த ஒப்பந்தம், ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவும், பரஸ்பர அடிப்படையில் அறிவாற்றலை மேம்படுத்தவும் உதவுவதோடு, சிறந்த முயற்சிகள், பரஸ்பர பலன் மற்றும் அடிக்கடி கலந்துரையாடவும் வழிவகுக்கும். இது தவிர ஆரியபட்டா ஆராய்ச்சி நிறுவனமும், ஐஐடி ரூர்கியும் ஆராய்ச்சி, மேம்பாடு, ஆலோசனை பணிகளுக்கு கூட்டாக நிதியுதவி வழங்கவும் ஒப்பு கொண்டுள்ளன. ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் பரிமாற்றம், பரிமாற்றம் செய்வதுடன், மாநாடுகள், பயிலரங்குகள் மற்றும் குறுகிய கால பயிற்சிகளை கூட்டாக மேற்கொள்ளவும் இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய ஆரியபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் திபங்கர் பானர்ஜி, இரு நிறுவனங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள்மற்றும் மாணவர்களுக்கு பரஸ்பர பலன் அளிக்கக்கூடிய ஐஐடி ரூர்கியின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி தமது நிறுவனம் உதவும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803169

***************



(Release ID: 1803182) Visitor Counter : 197


Read this release in: English , Urdu , Hindi