சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைக்கும் 2 நாள் பயிலரங்கு : மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்
Posted On:
04 MAR 2022 5:47PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைக்கும் 2 நாள் பயிலரங்கை, குஜராத் மாநிலம் கெவாடியாவின் ஏக்தா நகரில் உள்ள டென்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் அலுவலகம் ஆகியவை இணைந்து இன்று தொடங்கியது. இதை சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்கள் பற்றிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான இந்த பயிலரங்கின் நோக்கம். இங்கு நடைபெற்ற கண்காட்சியில் தேசிய அறக்கட்டளை சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள், அலிம்கோ நிறுவனம் வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அணுகல் மற்றும் உள்கட்டமைப்பு பற்றி, மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் உள்ள தேசிய மையம் தயாரித்த திரைப்படமும் இந்நிகழ்ச்சியில் காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், ‘‘ மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமான அணுகுமுறை, அரசு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இடையே உருவாக்க வேண்டும்’’ என்றார்.
மாற்றுத்திறனாளிகள் தங்களது முழு திறனை உணரவும், அவர்கள் கவுரமான, சுதந்திரமான, திருப்தியான வாழ்க்கை வாழவும் உதவும் வகையில் நமது யுக்தி இருக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சமூக அடிப்படையிலான முழுமையான வளர்ச்சி திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும், இது அடிமட்ட அளவில் மறுவாழ்வு முன்கள பணியாளர்களை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த பயிலரங்கில் 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த பயிலரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர், மாநில ஆணையர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. மாநிலங்களில் பின்பற்றப்படும் சிறப்பான நடைமுறைகளும் இதில் எடுத்து கூறப்பட்டன.
அனைவரும் உள்ளடங்கிய சமூகத்தை உருவாக்கவும், மாற்றுத்திறனாளிகளை, வாழ்க்கையின் முக்கிய நீரோட்டத்துக்கு அழைத்து வரவும், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறையின் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தை செயலாளர் திருமதி அஞ்சலி பாவ்ரா வலியுறுத்தினார்.
*****************
(Release ID: 1803066)
Visitor Counter : 1293