சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம்

Posted On: 04 MAR 2022 5:40PM by PIB Chennai

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக திரு மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா  நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 223-வது பிரிவு அளித்துள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவர் இந்த நியமன அறிவிப்பை 04.03.2022-ல் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு 07.03.2022-ல் இருந்து அமலுக்கு வரும்.

திரு மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா ராஜஸ்தான் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாகப் பணியாற்றுகிறார். மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை (நியமனங்கள் பிரிவு) இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

***************


(Release ID: 1803004) Visitor Counter : 209


Read this release in: English , Urdu , Hindi