மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவிருக்கும் ‘சாகர் பரிக்ரமா’-வை 2022 மார்ச் 5 அன்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைக்கிறார்
Posted On:
01 MAR 2022 7:08PM by PIB Chennai
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவிருக்கும் ‘சாகர் பரிக்ரமா’-வை 2022 மார்ச் 5 அன்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. .பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைக்கிறார். இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மற்றும் தேசிய மீன்வள வளர்ச்சி வாரியம் ஆகியவற்றால் குஜராத் அரசின் மீன்வளத் துறை, இந்திய மீன்வள ஆய்வு அமைப்பு, குஜராத் கடல்சார் வாரியம் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உடன் இணைந்து இது நடத்தப்படவிருக்கிறது.
‘விடுதலையின் அமிர்தப் பெருவிழா’-வின் ஒரு பகுதியாக குஜராத்தின் மாண்ட்வியில் உள்ள ஷ்யாமிஜி கிருஷ்ண வர்மா நினைவிடத்தில் தொடங்கும் இந்த முன்முயற்சி, கடலோர மீனவர்களின் பிரச்சனைகளை அறியும் முயற்சியாகும். குஜராத்தின் பிற மாவட்டங்களிலும், பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் இது ஏற்பாடு செய்யப்படும்.
குஜராத், டையூ, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், அந்தமான் & நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் என அனைத்து கடலோர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் இதை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 5 அன்று நடைபெறவுள்ள நிகழ்வின் போது, மீனவர்கள், மீன் விவசாயிகள், இளம் மீன்பிடி தொழில்முனைவோர் போன்றவர்களுக்கு ப்ரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா திட்டம் தொடர்பான சான்றிதழ்கள் / அனுமதிகள் வழங்கப்படும்.
மீன்வளத் துறையை மேம்படுத்துவதில் இந்திய அரசு முன்னணியில் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையுடன் கூடிய நிலையான மற்றும் பொறுப்பான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பயனுள்ள மீன்பிடி நிர்வாகத்திற்கான ஒழுங்குமுறை கட்டமைப்புடன் மீன்வள மேலாண்மை திட்டங்களை அரசு உருவாக்குகிறது. தேசத்தின் உணவுப் பாதுகாப்பிற்காகவும், கடலோர மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்திற்காகவும் கடல் மீன் வளங்களைப் பயன்படுத்துவதற்கும், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் ‘சாகர் பரிக்ரமா’ பயணம் கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802149
********************
(Release ID: 1802164)
Visitor Counter : 341