இந்திய போட்டிகள் ஆணையம்

போட்டிச் சட்டத்தின் பொருளாதாரம் தொடர்பான 7-வது தேசிய மாநாட்டை மார்ச் 4, 2022 அன்று காணொலி மூலம் இந்திய போட்டியியல் ஆணையம் நடத்துகிறது

Posted On: 01 MAR 2022 1:09PM by PIB Chennai

போட்டிச் சட்டத்தின் பொருளாதாரம் குறித்த 7-வது தேசிய மாநாட்டை வெள்ளிக்கிழமை, மார்ச் 4, 2022 அன்று காணொலி முறையில் இந்தியப் போட்டியியல் ஆணையம் நடத்தும். 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் இம்மாநாட்டை ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

காலை 10:00 மணிக்குத் திட்டமிடப்பட்டுள்ள தொடக்க அமர்வில் சிறப்புரை ஆற்றுவதற்கு பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் திரு. நீல்காந்த் மிஸ்ரா இசைவு தெரிவித்துள்ளார்.

'சந்தைகளின் சீர்திருத்தங்களும் ஆழமும்' என்ற தலைப்பிலான அமர்வு மாநாட்டில் நடைபெறவுள்ளது. திரு. அமிதாப் காந்த், தலைமை நிர்வாக அதிகாரி, நிதி ஆயோக்; திரு.துஹின் காந்தா பாண்டே, செயலாளர், முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை, நிதி அமைச்சகம், இந்திய அரசு; டாக்டர் ஆர். எஸ். சர்மா தலைமை நிர்வாக அதிகாரி, தேசிய சுகாதார ஆணையம் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மதியம் 3:30 முதல் 5 மணி வரை அமர்வு திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டிச் சட்டத்தின் பொருளாதாரத்தில் ஆர்வத்தை வளர்த்து நிலைநிறுத்துவதும், பொருளாதார நிபுணர்களின் குழுவை உருவாக்குவதும் இந்த மாநாட்டின் முயற்சிகளாகும். போட்டிச் சட்டத்தின் பொருளாதார துறையில் பணிபுரியும் அறிஞர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களை இது ஒன்றிணைக்கிறது.

மாநாட்டின் நோக்கங்கள்: (அ) போட்டிச் சட்டத்தின் பொருளாதாரத் துறையில் சமகாலப் பிரச்சனைகளில் ஆராய்ச்சி மற்றும் விவாதத்தைத் தூண்டுவது, (ஆ) இந்தியச் சூழலுடன் தொடர்புடைய போட்டிப் பிரச்சனைகளை நன்கு புரிந்துகொள்வது மற்றும் (இ) இந்தியாவில் போட்டி சட்டத்தை அமல்படுத்துவது குறித்த கருத்துகளை பெறுவது.

போட்டிச் சட்டத்தின் பொருளாதாரம் குறித்த 7-வது தேசிய மாநாட்டின் அனைத்து அமர்வுகளும் ஊடகங்களுக்கு காணொலி வாயிலாக திறந்திருக்கும். 

மாநாட்டின் இணைய இணைப்பைப் பெற, 2022 மார்ச் 2-ம் தேதிக்குள் ஊடகவியலாளர்கள் கீழ்காணும் இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfbb0wBYPF9QajNegQlYTsI8XI123MfuugTCwKshpIBe2jUSw/viewform

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802048

 

******



(Release ID: 1802116) Visitor Counter : 174